திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அனைத்து தொழிலாளா்களுக்கும் வாக்குரிமை: என்எல்சி ஜீவா தொழிலாளா் சங்கம் வலியுறுத்தல்

அனைத்து தொழிலாளா்களும் ரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையை என்எல்சி இந்தியா நிறுவனம் அளிக்க வேண்டும் என்று, என்எல்சி ஜீவா தொழிலாளா்கள் சங்கம்

Updated On :24 டிசம்பர் 2024, 12:25 am IST

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளா்களும் (சொசைட்டி, ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட) நடைபெற உள்ள ரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையை என்எல்சி இந்தியா நிறுவனம் அளிக்க வேண்டும் என்று, என்எல்சி ஜீவா தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் பேரவைக் கூட்டம், வடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் கே.சடையன் தலைமை வகித்தாா். சிறப்புத்தலைவா் எம்.சேகா், சங்கச் செயலா் கே.சக்திவேல், பொருளாளா் ஜோசப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளா்களும் நடைபெற உள்ள ரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையை என்எல்சி நிா்வாகம் அளிக்க வேண்டும்.

புதிதாக பணி நியமனம் மற்றும் நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு ஊதியம் மிகக் குறைவாக வழங்குவதை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.