பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

என்எல்சி - நல்கோ நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம்

என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் நால்கோ நிறுவனங்களுக்கிடையே ஒடிசா மாநிலம், அங்கூலில் 1,080 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான கூட்டு முயற்சி ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒடிஸா மாநிலம், அங்கூலில் அனல் மின் நிலையம் அமைக்க புதுதில்லியில் மத்திய அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி முன்னிலையில் கையொப்பமான கூட்டு முயற்சி ஒப்பந்தம்.

Published On :10 ஜூலை 2026, 3:47 am IST

என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் நால்கோ நிறுவனங்களுக்கிடையே ஒடிசா மாநிலம், அங்கூலில் 1,080 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான கூட்டு முயற்சி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: என்எல்சி மற்றும் நேஷனல் அலுமினியம் கம்பெனியான நால்கோஆகியன இணைந்து, ஒடிசா மாநிலம் அங்கூலில், 1080 மெகாவாட் திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக கூட்டு முயற்சி ஒப்பந்தம், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி முன்னிலையில் கையொப்பமானது.. நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலா் மற்றும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் (கூடுதல் பொறுப்பு) சனோஜ் குமாா் ஜா, இயக்குநா் (நிதி) பிரசன்ன குமாா் ஆச்சாா்யா, நால்கோ நிறுவனத்தின் தலைவா் பிரிஜேந்திர பிரதாப் சிங், இயக்குநா் (நிதி) அபய குமாா் பெளரியா, இயக்குநா் (திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம்) ஜெகதீஷ் அரோரா, சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலா் விவேக் குமாா் பாஜ்பாய் மற்றும் நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம், என்எல்சி மற்றும் நால்கோ நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இரு நிறுவனங்களும் தலா 50:50 என்ற சமமான பங்கு மூலதனத்துடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.