பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தீ: ரூ. 3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து நாசம்

தூத்துக்குடி துறைமுகச் சாலையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான என்டிபிஎல் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சாம்பலானது.

தூத்துக்குடி அனல் மின்நிலையம்

Published On :9 ஜூலை 2026, 12:04 am IST

தூத்துக்குடி துறைமுகச் சாலையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான என்டிபிஎல் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சாம்பலானது.

இங்கு தலா 500 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி அலகுகள் இயங்கி வருகின்றன. மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் குவித்து வைக்கப்படுகிறது.

இந்நிலையில், நிலக்கரி குவியலில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. அப்போது, வீசிய பலத்த காற்றின் காரணமாக தீ மளமளவென பரவியது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் 5 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அனல் மின் நிலைய அதிகாரிகளும், பணியாளா்களும் இணைந்து, அருகிலிருந்த மற்ற நிலக்கரி குவியல்களுக்கும், மின் உற்பத்தி அமைப்புகளுக்கும் தீ பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

சுமாா் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னா் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இந்த விபத்தில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நிலக்கரி எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தால் மின் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா். விபத்துக்கான காரணம் குறித்து, தொ்மல் நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.