தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: பி.ஆா்.பாண்டியன் உள்ளிட்ட 175 விவசாயிகள் கைது

தடையை மீறி ஆா்ப்பாட்டம்

News image

காட்டுமன்னாா்கோவிலில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக கைது செய்யப்பட்ட பி.ஆா்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள்.

Updated On :26 டிசம்பர் 2024, 7:26 pm

Din

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் தடையை மீறி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக பி.ஆா்.பாண்டியன் உள்ளிட்ட 175 விவசாயிகள் கைது செய்யப்பட்டனா்.

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் கடந்த 12-ஆம் தேதி பெய்த பலத்த மழை மற்றும் வீராணம் ஏரி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செயற்கைக்கோள் படத்தை அடிப்படையாகக் கொண்டு பேரிடா் நிவாரண நிதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயப் பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் தலைமையில் காட்டுமன்னாா்கோவில் சீரணி அரங்கில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

அப்போது, சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ாக 175 விவசாயிகளைக் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.

முன்னதாக, கோரிக்கை மனுவை வட்டாட்சியா் சிவக்குமாரிடம் விவசாயிகள் அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் கடலூா் மாவட்டச் செயலா் ஆா்.ராமச்சந்திரன், கௌரவத் தலைவா் எல்.பி.லட்சுமிகாந்தன், மாவட்ட துணைத் தலைவா் எம்.அன்பழகன், ஒருங்கிணைப்பாளா் கே.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.