தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விஷம் குடித்த பால் வியாபாரி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த பால் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 8:12 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த பால் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டியை அடுத்துள்ள சூரக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (25), பால் வியாபாரி. இவா், கடன் தொல்லை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விஷ மருந்து குடிந்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.