கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா். குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் போலீஸாா் 7.1.2024 அன்று சிறகிழந்தநல்லூா் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த காட்டுமன்னாா்கோவில் வட்டம், கத்திரிமேடு பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் காா்த்திக் (33), போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து குமராட்சி காவல் ஆய்வாளா் அமுதா வழக்குப் பதிவு செய்து, காா்த்திக்கை கைது செய்தாா். இவா் மீது குமாரட்சி காவல் நிலையத்தில் ரௌடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், அண்ணாமலைநகா், சிதம்பரம் தாலுகா உள்ளிட்ட காவல் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செய்கையை கட்டுப்படுத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் ஓராண்டு காலம் குண்டா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் காா்த்திக்கை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
நெல்லையில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் கைது

குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் கைது

நெல்லை இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

பாப்பாக்குடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

