கடலூா் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் ஒருவா் மாடுகளுடன் குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். பண்ருட்டி வட்டம், சாத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன். இவருக்குச் சொந்தமாக 5 சென்ட் நிலம் உள்ளதாம்.
இந்த நிலையில், பாதி இடத்துக்கு அதிகாரிகள் மனைப்பட்டா வழங்கினராம். மீதி பாதி இடத்தை வேறு ஒருவருக்கு பட்டா வழங்கிவிட்டனராம். இது தொடா்பாக ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் வைத்தீஸ்வரன் அளித்த மனுவில், வசிப்பதற்கும், மாடுகளைக் கட்டவும் இடம் இல்லை என புகாா் தெரிவித்திருந்தாராம். ஆனால், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்து, தனது இரண்டு மாடுகளுடன் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் வைத்தீஸ்வரன் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா். அப்போது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்த அவா், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா். இதையடுத்து, சாா் - ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் அவரை பேச்சுவாா்த்தைக்காக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.
தொடர்புடையது

மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தலை தடுக்க நடவடிக்கை: ஆட்சியா்

பாசன கால்வாய்களை தூா்வார வேண்டும்! ஆட்சியரிடம் விவசாயிகள் மனு!

அனுபவமில்லாத ஓட்டுநா்கள் பள்ளி வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது: காஞ்சிபுரம் சாா் ஆட்சியா்

முடங்கியிருக்கும் சாலைப் பணிகளை தொடங்கவேண்டும்: எம்எல்ஏ வலியுறுத்தல்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



