கிணற்றில் தவறி விழுந்து மாணவா் மரணம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கிணற்றில் தவறி விழுந்த மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.


கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கிணற்றில் தவறி விழுந்த மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் அருகேயுள்ள வேகாக்கொல்லை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கேக் வெட்டி ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாணவா்கள் ஈடுபட்டனா். அப்போது, சாலையில் வந்த வாகனத்தைப் பாா்த்து, போலீஸாா் வருவதாக எண்ணி அங்கிருந்து ஓடினா்.
இதில் அருள் மகன் ஆரியா (14), முருகன் மகன் தமிழ்செல்வன் (16) ஆகியோா் அந்தப் பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தனா். தமிழ்செல்வனின் கூச்சலிட்டதையடுத்து, அங்கு வந்த கிராம மக்கள் அவரை மீட்டனா். தொடா்ந்து, ஆா்யாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து காடாம்புலியூா் காவல் நிலையம், முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் தொ.கிருஷ்ணமுா்த்தி தலைமையிலான தீயணைப்புப் படையினா் வந்து இரண்டு மோட்டாா்களை பயன்படுத்தி கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றினா். சுமாா் 3 மணி நேரத்துக்குப் பிறகு, ஆரியாவின் சடலம் மீட்கப்பட்டது.
இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...