வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேப்பூரை அடுத்துள்ள என்.நாரையூா் கிராமத்தில் கடந்த 5-ஆம் அம்பேத்கா் சிலை அமைக்கப்பட்டது. இதையறிந்த வேப்பூா் வட்டாட்சியா் மற்றும் போலீஸாா் அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாகக் கூறி, 6-ஆம் தேதி அந்த சிலையை அகற்றினராம்.
இதேபோல, சிறுநெசலூா் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தையும் அகற்றினராம்.
இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி தலைமையில் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் வட்டாட்சியா் மணிகண்டன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அவா்கள் கோரிக்கை மனு அளித்து கலைந்து சென்றனா்.

