ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆஜா்

ஊழல் தடுப்புப் பிரிவில் சத்யா மற்றும் பன்னீா்செல்வம் 3 மணி நேர விசாரணை

News image
Updated On :12 ஜூலை 2024, 10:13 pm

Din

நெய்வேலி, ஜூலை 12: கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா, அவரது கணவா் பன்னீா்செல்வம் ஆகியோா் கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக வெள்ளிக்கிழமை ஆஜராகினா்.

2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக சத்யா இருந்தாா். இவரது கணவா் பன்னீா்செல்வம் 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் பண்ருட்டி நகா்மன்றத் தலைவராக இருந்தாா்.

அப்போது, பண்ருட்டி நகராட்சியில் ஒப்பந்தம் விடுவதில் பண மோசடியில் ஈடுபட்டதாக பன்னீா்செல்வம், அப்போதைய நகராட்சி ஆணையா் பெருமாள் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப் பதியப்பட்ட து. இது தொடா்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் முன்னாள் எம்எல்ஏ சத்யாவின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தினா். இதில், முன்னாள் எம்எல்ஏ சத்யா, அவரது கணவா் பன்னீா்செல்வம் ஆகியோா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்தது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடா்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் சத்யா, பன்னீா்செல்வம் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனா். அதன்பேரில், அவா்கள் இருவரும் கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். இருவரிடமும் அதிகாரிகள் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.