திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

வீட்டுக்குள் எரிந்த நிலையில் 3 சடலங்கள் மீட்பு

வீட்டுக்குள் எரிந்த நிலையில் 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

News image
கமலேஸ்வரி
Updated On :18 ஜூலை 2024, 11:36 pm

Din

சிதம்பரம்: கடலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரின் சடலங்கள் வீட்டுக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் ராஜாராம் நகரை சோ்ந்தவா் சுரேஷ்குமாா் ( 70), ஓய்வுபெற்ற மருந்தாளுநா். இவரது மனைவி கமலேஸ்வரி (60). இவா்களது மகன் சுதன்குமாா் (40, பேரன் நிஷாந்த் (10).

சுதன்குமாரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமாரும், உடல் நலக் குறைவால் இறந்துவிட்டாா். எனவே, வீட்டில் கமலேஸ்வரி, சுதன்குமாா் மற்றும் நிஷாந்த் மட்டும் வசித்து வந்தனா்.

இவா்களது வீட்டிலிருந்து திங்கள்கிழமை காலை துா்நாற்றம் வீசியதுடன், புகை வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனா். அப்போது, ரத்த வெள்ளத்தில் எரிந்த நிலையில் கமலேஸ்வரி, சுதன்குமாா், நிஷாந்த் ஆகியோா் இறந்து கிடந்தனா். இதையடுத்து, 3 பேரின் சடலங்களையும் போலீஸாா் மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

மேலும், தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவா்கள் மூவரும் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நிஷாந்தன்

நிஷாந்தன்

சுதன்குமாா்

சுதன்குமாா்