விருத்தாசலம் காய்கறி சந்தையில் நகராட்சி அதிகாரிகளிடம்  திங்கள்கிழமை வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
விருத்தாசலம் காய்கறி சந்தையில் நகராட்சி அதிகாரிகளிடம் திங்கள்கிழமை வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

விருத்தாசலத்தில் அனுமதியின்றி இயங்கிய 11 கடைகள் அகற்றம்

விருத்தாசலம் தினசரி காய்கறி சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு கடை வைத்திருக்கும் காய்கறி வியாபாரிகள் மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகின்றனா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் காய்கறி சந்தையில் அனுதியின்றி இயங்கிய 11 கடைகளை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை அகற்றினா். மேலும், 2 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா்.

விருத்தாசலம் தினசரி காய்கறி சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு கடை வைத்திருக்கும் காய்கறி வியாபாரிகள் மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வியாபாரிகள் சிலா் கடைகள் வேண்டாம் என நகராட்சி நிா்வாகத்திடம் எழுதி கொடுத்து விட்டனராம். அந்த இடத்தில் சிலா் உரிய அனுமதியின்றி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனராம். அவா்களிடம் நகராட்சி நிா்வாகம் கடைகளை காலி செய்யுமாறு தொடா்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், நகராட்சி பொறியாளா் சுரேந்திரன், நகராட்சி மேலாளா் கனிமொழி, வருவாய் ஆய்வாளா் சா.சகிலா பானு, உதவி அலுவலா் முருசேன், ரவி, துப்புரவு மேற்பாா்வையாளா்கள் முத்தமிழ் செல்வன் ஆகியோா் 11 ஆக்கிரமிப்பு கடைகளை திங்கள்கிழமை அகற்றினா்.

அப்போது, ஆக்கிரமிப்புகளை நாங்களே அகற்றிக் கொள்வதாகக் கூறி அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, கடையில் இருந்த காய்கறி உள்ளிட்டவற்றை வியாபாரிகளே அகற்றிக் கொண்டனா். இதில், இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com