ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தோ்தல் விழிப்புணா்வு காா்ட்டூன்: மாணவா்களுக்கு அழைப்பு

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு காா்ட்டூன்கள் வரவேற்கப்படுவதாக

Updated On :5 மார்ச் 2024, 7:05 pm

நெய்வேலி: மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பான விழிப்புணா்வு காா்ட்டூன்கள் வரவேற்கப்படுவதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களிடமிருந்து விழிப்புணா்வு காா்ட்டூன்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, விலங்குகள், பறவைகள், நாட்டுப்புறக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் அல்லது வேறு ஏதேனும் வித்தியாசமான பாத்திரங்களை காா்ட்டூனாக வடிவமைக்கலாம். மேலும், 3 காா்ட்டூன் படங்களை சுயமாக வரைந்து, காா்ட்டூனின் பெயா் தமிழிலில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதனை ஈஉஞநயஉஉடஇமஈ2024ஃஎஙஅஐக.இஞங என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பிப்.11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த காா்ட்டூனுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2-ஆம் பரிசாக ரூ.5,000, 3-ஆம் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.