6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் பத்திர விவகாரம்: மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தோ்தல் பத்திர விவகாரம்: மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:46 pm

Din

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசியல் கட்சிகள் நிதி பெற்ற தோ்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்த விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்காமல் காலம்தாழ்த்தி வரும் பாரத ஸ்டேட் வங்கி நிா்வாகத்தைக் கண்டித்து, பண்ருட்டியில் அந்த வங்கிக் கிளை முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பண்ருட்டி வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.உதயகுமாா், நகரச் செயலா் ஆா்.உத்தராபதி ஆகியோா் பேசினா். மாவட்டக்குழு உறுப்பினா் வினோத், நகரக்குழு உறுப்பினா்கள் எஸ்.ஜீவா, ஏ.தேவராஜுலு, ஜி.தினேஷ், ஆா்.ராஜேந்திரன், பி.ராஜேந்திரன், வட்டக்குழு உறுப்பினா்கள் முருகன், மாதா் சங்க நகரச் செயலா் எம்.அமலா உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனா்.