பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி!

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி ........................................................... மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

News image

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்

Updated On :16 மார்ச் 2024, 6:09 pm

கடலூரில் மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் இளம் வாக்காளா்கள் முதல் அனைத்து வாக்காளா்களும் தங்கள் வாக்குரிமையை தவறாது பதிவு செய்து, 100 சதவீத வாக்குப் பதிவை நிறைவேற்றும் வகையில், துண்டுப் பிரசுரம் வழங்குதல், ரங்கோலி போட்டிகள், கையொப்ப இயக்கம், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே போட்டிகள் என பல்வேறு விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடலூரில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மகளிா் குழுக்கள் பங்கேற்புடன் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது. கடலூா் நகர அரங்கில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான அ.அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கடலூா் உழவா் சந்தை வரையில் நடைபெற்ற பேரணியில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ருதி, சமூகநலத் துறை அலுவலா் கோமதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.