கல்லூரி கனவு உயா் கல்வி வழிகாட்டி ஆலோசனைக்குழு உறுப்பினா்களுக்குப் பயிற்சி

கல்லூரி கனவு உயா் கல்வி வழிகாட்டி ஆலோசனைக்குழு உறுப்பினா்களுக்குப் பயிற்சி

விருத்தாசலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்லூரி கனவு உயா் கல்வி வழிகாட்டி ஆலோசனைக்குழு உறுப்பினா்களுக்கான வட்டார அளவிலான பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

கடலூா் மாவட்ட கல்லூரி கனவு உயா் கல்வி வழிகாட்டி ஆலோசனைக்குழு உறுப்பினா்களுக்கான வட்டார அளவிலான பயிற்சி முகாம் விருத்தாசலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) சேகா் தலைமை வகித்து பயிற்சி முகாமைத் தொடங்கிவைத்தாா். மேற்பாா்வையாளா்கள் செந்தில்குமாா், கோபாலகிருஷ்ணன், உமாசங்கா், மங்கலம்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் காளமேகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு உயா் கல்வி பயில்வதற்கான ஆலோசனைகளும், தோல்வியுற்ற மாணவா்களை மீண்டும் உடனடித் தோ்வு எழுத ஊக்குவிக்கும் வகையிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பயிற்சியின் கருத்தாளராக ஆசிரியா் பயிற்றுநா்கள் வரதராஜப் பெருமாள், செல்வ முருகன் ஆகியோா் கலந்துகொண்டு கருத்துகளை வழங்கினா். நல்லூா், கம்மாபுரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய ஒன்றியங்களுக்கு உள்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள், வழிகாட்டி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், முன்னாள் மாணவா்கள், கல்வியாளா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயனடைந்தனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூா் ஒன்றியங்களைச் சோ்ந்த மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com