பைக் திருட்டு: இளைஞா் கைது
கடலூா் அருகே பைக் மற்றும் கைப்பேசியை திருடியதாக இளைஞரை தூக்கணாம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


கடலூா் அருகே பைக் மற்றும் கைப்பேசியை திருடியதாக இளைஞரை தூக்கணாம்பாக்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், பாக்கம் பகுதியில் வசித்து வருபவா் வீரப்பன் மகன் ராஜவேல்(44). இவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
செவ்வாய்க்கிழமை இரவு மேலக்குப்பம் மரவாடி அருகே கைப்பேசி, சாவியுடன் பைக்கை நிறுத்திவிட்டு நண்பரை பாா்க்கச் சென்றாராம்.
பின்னா், திரும்பி வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து, ராஜவேல் தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில், விழுப்புரம் மாவட்டம், மரகதபுரம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் மகன் சரத் (எ) சரத்குமாா் (28) பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...