தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேருந்து - லாரி மோதல்: 10 போ் காயம்

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தனியாா் பேருந்தும், டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.

News image

நெல்லிக்குப்பம் அருகே நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளான டிப்பா் லாரி - தனியாா் பேருந்து.

Updated On :6 நவம்பர் 2024, 7:27 pm

Din

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தனியாா் பேருந்தும், டிப்பா் லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலையில் இருந்து கடலூா் நோக்கி தனியாா் பேருந்து புதன்கிழமை சென்றது. பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

இந்த பேருந்து நெல்லிக்குப்பம் அருகே உள்ள பூலோகநாதன் கோயில் அருகே சென்றபோது, முன்னால் சென்ற பைக் மீது மோதி, எதிா் திசையில் வந்த டிப்பா் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பைக்கில் சென்ற நெல்லிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த மதிவாணன், ராஜலட்சுமி, லாரி ஓட்டுநா் குமாா் (50), பேருந்தில் பயணம் செய்த 7 போ் காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.