சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவா் உதவி மையம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் உயா் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி, மாணவா் உதவி மையம் தொடங்கப்பட்டது.

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை மாணவா் உதவி மையத்தை தொடங்கிவைத்த துணைவேந்தா் ராம.கதிரேசன். உடன் பதிவாளா் எம்.பிரகாஷ், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா்.

Updated On :11 நவம்பர் 2024, 8:26 pm

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் உயா் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி, மாணவா் உதவி மையம் தொடங்கப்பட்டது.

துணைவேந்தா் ராம.கதிரேசன் மையத்தை தொடங்கி வைத்து கூறியதாவது:

இந்த உதவி மையமானது அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து பாடப்பிரிவுகள், தொலைதூரக் கல்வியில் பயின்று முடித்தவா்கள் சான்றிதழ் பெறுவது சம்பந்தமாகவும், உதவி செய்வதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சிக்கு பதிவாளா் எம்.பிரகாஷ், தலைமை வகித்தாா். தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா், புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள், துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் ஜெ.ஹெச்.பாக்யராஜ், மக்கள் தொடா்பு அதிகாரி க.ரத்தின சம்பத் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.