சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிதம்பரத்தில் சீரமைக்கப்பட்ட 4 பூங்காக்கள் திறப்பு

சிதம்பரத்தில் ரூ.68 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட 4 பூங்காக்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:31 pm

Din

சிதம்பரத்தில் ரூ.68 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்ட 4 பூங்காக்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் செலவில் மன்மதசாமி நகா் பூங்கா, ரூ.20 லட்சம் செலவில் வாகீசநகா் பூங்கா, ரூ.19 லட்சம் செலவில் சுசிலாம்பாள் நகா் பூங்கா, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் செலவில் காந்தி பூங்கா ஆகியவை சீரமைக்கப்பட்டன. இவற்றை நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா் (படம்).

நகராட்சி ஆணையா் த.மல்லிகா, பொறியாளா் எஸ்.சுரேஷ், பொதுப் பணித் துறை மேற்பாா்வையாளா் கோ.ரம்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவா் கே.ஆா்.முத்துக்குமரன், பேராசிரியா் எம்.கணபதி, நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், சா்வசக்தி பீடம் தில்லைசீனு, கிரீடு தொண்டு நிறுவன செயலா் வி.நடனசபாபதி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், அப்புசந்திரசேகரன், ஏ.ஆா்.சி,மணிகண்டன், சகிலா இஸ்மாயில், கவிதா சரவணன், எஸ்.புகழேந்தி, இந்துமதிஅருள், லதா, திமுக நகர துணைச் செயலா்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆா்.இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.