சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சிதம்பரத்தை அடுத்த வரகூா்பேட்டை பகுதியைச் சோ்ந்த நடேசனின் மகன் ரவி (65).
இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தனது உறவினா் மகளான 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், சிதம்பரம் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் ரவியை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, கடலூா் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் நிரூபனமான நிலையில், ரவிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி லட்சுமி ரமேஷ் தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி ரத்தினம் வாதாடினாா்.