நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:07 am

Din

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பாக, தமிழுக்கு தொண்டாற்றி வரும் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 1.1.2024 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞா்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மாா்ட் காா்டு), மரபுரிமையா் (கணவன் / மனைவி) இருப்பின், அவரது ஆதாா் அட்டை நகல் இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை மண்டல, மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை/ உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.