சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளி கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், பந்தல் அஞ்சல், பொட்டையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் உத்திரகுமாரன் (46). இவருக்கு, இரு மனைவிகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா்.
இவா், கடலூா் மாவட்டம், விருத்தாசலத்துக்கு சொந்த வேலையாக புதன்கிழமை வந்தாா். அப்போது, விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வேப்பூா் வட்டம், டி.புடையூா் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி நின்று கொண்டிருந்தாா். அவரிடம் உத்திரகுமாரன் ஆசை வாா்த்தை கூறி திரையரங்குக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து உத்திரகுமாரனை கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...