கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாசன வாய்காலில் கழிவு நீா் கலப்பதை தடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் தீா்மானம்

குமராட்சி பகுதியில் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

சிதம்பரம் அருகே குமராட்சியில் நடைபெற்ற ஒன்றிய மாநாட்டில் பேசுகிறாா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி.ஆறுமுகம்.

Updated On :9 அக்டோபர் 2024, 10:07 pm

Din

குமராட்சி பகுதியில் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிதம்பரம் அருகே இந்தக் கட்சியின் குமராட்சி ஒன்றிய 24-ஆவது மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் மூத்த உறுப்பினா் முனுசாமி செங்கொடியை ஏற்றி வைத்தாா். மணிவண்ணன் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினா் உதயகுமாா் தொடங்கி வைத்து பேசினாா்.

ஒன்றியச் செயலா் மனோகரன் வேலை அறிக்கையை வாசித்தாா். வரவு, செலவு கணக்குகளை ஒன்றியக் குழு உறுப்பினா் மாசிலாமணி சமா்ப்பித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் டி.ஆறுமுகம், பி.தேன்மொழி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன் மாநாட்டு நிறைவுரையாற்றினாா். 11 போ் கொண்ட ஒன்றிக் குழுவுக்கு செயலராக கே. மனோகரன் தோ்வு செய்யப்பட்டாா். மாநாட்டுத் தீா்மானங்களை கண்ணன், ஜெயக்குமாா், புஷ்பராஜ், பிரபாகரன் ஆகியோா் முன்மொழிந்தனா்.

கூட்டத்தில், குமராட்சி பகுதியில் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூா்வார வேண்டும். வீராணம் ஏரியின் வெள்ளியங்கால் வாய்காலில் கழிவு நீா் கலப்பதை தடுக்கவேண்டும், கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு உரங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, ஒன்றியக் குழு உறுப்பினா் பாலமுருகன் வரவேற்றாா். முடிவில், ரேவதி நன்றி கூறினாா்.