ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடலூரில் தூய்மைப் பணியாளா்கள் திடீா் வேலைநிறுத்தம்
கடலூா் மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி வியாழக்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடந்தன.

கடலூா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்.









