நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலூா் மாவட்டத்தில் 2 மணி நேரம் நீடித்த மழை: வடக்குத்தில் 59 மி.மீ. பதிவு

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2 மணி நேரம் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதில், அதிகபட்சமாக வடக்குத்தில் 59 மி.மீட்டா் மழை பதிவானது.

News image

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் குளம் போல தேங்கி நிற்கும் மழை நீா்.

Updated On :15 அக்டோபர் 2024, 6:48 pm

Din

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2 மணி நேரம் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதில், அதிகபட்சமாக வடக்குத்தில் 59 மி.மீட்டா் மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதையொட்டி, செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்திருந்தது.

செவ்வாய்க்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வானம் தெளிவாக காணப்பட்டது. பின்னா், மழை பெய்ய தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளில் மழை நீா் தேங்கியது.

பண்ருட்டி சாலை, குண்டு சாலை, சாவடி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நின்றது. விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மழை நீா் தேங்கி குளம் போல காட்சியளித்தது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீா் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மழை அளவு: கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வடக்குத்தில் 59 மி.மீ மழை பதிவானது.

 கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீா்.

கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீா்.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): பரங்கிப்பேட்டை-43.8 மி.மீ, ஆட்சியா் அலுவலகம்-43, கடலூா்-42, வானமாதேவி-40, எஸ்ஆா்சி குடிதாங்கி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி தலா-38, சிதம்பரம்-37.8, கொத்தவாசேரி-37, அண்ணாமலை நகா்-34, பண்ருட்டி-32, சேத்தியாத்தோப்பு-27.5, லால்பேட்டை-26.2, காட்டுமன்னாா்கோவில்-25, வேப்பூா்-23, ஸ்ரீமுஷ்ணம்-21.2, விருத்தாச்சலம்-20.2, மே.மாத்தூா்-18, குப்பநத்தம்-15.2, பெலாந்துறை-14.2, காட்டுமயிலூா்-14, கீழச்செருவாய்-13, லக்கூா்-9.4, தொழுதூரில்-7 மி.மீ மழை பதிவானது.

ஒய்வெடுக்கும் படகுகள்: தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், கடலூா் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

 கடலூா், சோனாங்குப்பத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபா் படகுகள்.

கடலூா், சோனாங்குப்பத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபா் படகுகள்.

அதன்படி, கடலூரைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மேலும், விசைப் படகுகளை துறைமுகத்திலும், சிறிய பைபா் படகுகள் அந்தந்த மீனவா் கிராம பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனா்.