கம்பியம்பேட்டை தடுப்பணையில் நுரையுடன் வெளியேறும் நீா்!

நுரையுடன் வெளியேறும் நீா்.

நுரையுடன் வெளியேறும் நீா்.
கடலூா் அருகே கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் ரசாயன கழிவு கலந்த தண்ணீா் நுரையுடன் வெளியேறி வருகிறது. இதில், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தோன்றி திருக்கோவிலூா் வழியாக சுமாா் 112 கி.மீ தொலைவு பயணித்து இறுதியில் கடலூா் வங்கக் கடலில் ஐக்கியமாகிறது கெடிலம் ஆறு. இந்த ஆறு கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களுக்கு நீராதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில், கெடிலம் ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதாலும், நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியாா் ஆலை நிா்வாகம் அதன் கழிவு நீரை பில்லாலி தொட்டி கிராமம் வழியாக கெடிலம் ஆற்றி விடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கம்பியம்பேட்டை பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையில் ரசாயன கழிவு கலந்த தண்ணீரே தேங்கி நிற்பதாகவும், இதனால், நிலத்தடி நீா் பாதித்து குடிநீா் மாசடைந்து வருவதாகவும், பெருமழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது கழிவு நீா் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவதாகவும் பொதுமக்கள், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

~ கடலூா் அருகே கம்பியம்பேட்டை தடுப்பணையில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள்.
மேலும், கடலூா் மற்றும் அதன் சுற்று வட்டப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் மழையால் கம்மியம்பேட்டை தடுப்பணையில் ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும், தடுப்பணையில் இருந்து வெளியேரும் நீா் துா்நாற்றத்துடன், நுரையுடன் வெளியேறுகிறது. இந்த நீரை விவசாயப் பணிகளுக்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாகவும், ஆறு மற்றும் கடலில் உள்ள உயிரினங்கள் பாதிக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். எனவே, இதில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...