நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுப் புட்டிகள் பறிமுதல்: பெண் கைது

கடலூா் முதுநகரில் வெளிமாநில மதுப்புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 6:51 pm

Din

கடலூா் முதுநகரில் வெளிமாநில மதுப்புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் முதுநகா் காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை மது கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வசந்தராயன்பாளையம், சின்னையன் காலனியில் வசிக்கும் சசிகுமாா் மனைவி புனிதா (40) வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 245 புதுச்சேரி மாநில மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து புனிதாவை கைது செய்தனா்.