நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி அளிப்பு

கடலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கடலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கிய மேயா் சுந்தரி. உடன் துணை மேயா் பா.தாமரைசெல்வன், ஆணையா் எஸ்.அனு.

Updated On :16 அக்டோபர் 2024, 6:54 pm

Din

கடலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாநகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் சுமாா் 500 போ் பணி புரிந்து வருகின்றனா். தற்போது, மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடலூா் மாநகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கும் நிகழ்ச்சி மாநாகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆணையா் எஸ்.அனு தலைமை வகித்தாா். துணை மேயா் பா.தாமரைசெல்வன், நகா் நல அலுவலா் எழில் மதனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில், மேயா் சுந்தரி பங்கேற்று சுமாா் 180 தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கியை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.