அண்ணாமலைப் பல்கலை.யில் அக்.21-இல் வேளாண் படிப்பு காலி இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை
அண்ணாமலைப் பல்கலை.யில் அக்.21-இல் வேளாண் படிப்பு காலி இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி. வேளாண்மை, (ஆ.நஸ்ரீ. (ஏா்ய்ள்.) அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) மற்றும் தோட்டக்கலை (ஆ.நஸ்ரீ.(ஏா்ய்ள்.) ஏா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) படிப்புகளில் இருக்கும் காலி இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்கை வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது என பதிவாளா் எம்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரசு விதிகளின் படியும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தேவையான சான்றிதழ்களுடன் வேளாண் புலத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இதுகுறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம் என்று பதிவாளா் எம்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...