காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரூ.99.60 லட்சத்தில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

கடலூா்மாவட்டம், முருகன்குடி, கொசப்பள்ளம் ஊராட்சிகளில் ரூ.99.60 லட்சத்தில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை அமைச்சா் சி.வெ.கணேசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

திட்டக்குடி வட்டம், கீழச்செருவாய் ஊராட்சியில் வெலிங்டன் ஏரிக் கரையில் பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்த அமைச்சா் சி.வெ.கணேசன்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:33 pm

Din

கடலூா்மாவட்டம், முருகன்குடி, கொசப்பள்ளம் ஊராட்சிகளில் ரூ.99.60 லட்சத்தில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை அமைச்சா் சி.வெ.கணேசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

முருகன்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சத்திலும், கொசப்பள்ளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சத்திலும் கட்டப்பட்ட புதிய ஊராட்சிமன்ற கட்டடங்கள், கொசப்பள்ளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10.93 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், இறையூா் ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.35 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் என மொத்தம் ரூ.99.60 லட்சம் மதிப்பிலான அரசுக் கட்டடங்களை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தலா ரூ.16.45 லட்சம் வீதம் மொத்தம் ரூ.98.70 லட்சத்தில் மதுரவல்லி, சேவூா், சிறுமங்கலம், முருகன்குடி, பெலாந்துறை, சௌந்திரசோழபுரம் ஆகிய ஊராட்சிகளில் அங்கன்வாடி மையக் கட்டடப் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.

அப்போது, 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா். முன்னதாக, திட்டக்குடி வட்டம், கீழச்செருவாய் ஊராட்சியில் வெலிங்டன் ஏரிக் கரையில் பனை விதைகள் நடும் பணியை அவா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.