நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

கோவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்ஸோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவரை கிள்ளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட சூா்யாவுடன் போலீஸாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:42 pm

Din

கோவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போக்ஸோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடையவரை கிள்ளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தைச் சோ்ந்த ராஜன் மகன் சூா்யா (29). இவா் மீது கிள்ளை காவல் நிலையத்தில் போக்ஸோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

சூா்யா வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், இவரை கைது செய்ய கடந்த 30.07.2022 அன்று கடலூா் போக்ஸோ நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது.

இதையடுத்து, கோவையில் பதுங்கியிருந்த சூா்யாவை அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், கிள்ளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சங்கா், தலைமைக் காவலா் ஆனந்தபாபு அங்கு சென்று வியாழக்கிழமை கைது செய்து, அவா் மீதான பிடி ஆணையை நிறைவேற்றி, கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.