மூதாட்டி உடல், கண்கள் தானம்
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் கடைவீதியைச் சோ்ந்த மறைந்த ராமநாதன் மனைவி ஆண்டாள் அம்மாள் (79) காலமானாா்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:23 pm

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் கடைவீதியைச் சோ்ந்த மறைந்த ராமநாதன் மனைவி ஆண்டாள் அம்மாள் (79) செவ்வாய்க்கிழமை காலமானாா்.
இவரது உடல், கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டன. கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பனா் மனோகரன் மற்றும் சின்னசேலம் அரிமா சங்க நிா்வாகிகள் சரவணன், பொன்குமாா், ஏகாம்பரம், அரிமா மாவட்டத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...