புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பைக் மீது பேருந்து மோதல்: வழக்குரைஞா் உயிரிழப்பு

கடலூா் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் வழக்குரைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:43 pm

Din

கடலூா் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் வழக்குரைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், லக்கம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சேகா் மகன் அஜய்கோஷ்(24). இவா், கடலூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வந்தாா். புதன்கிழமை அதிகாலை கடலூா்-பண்ருட்டி சாலையில் கோண்டூா் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து, பைக் மீது மோதியது. இதில், அஜய்கோஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.