ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிதம்பரம் அருகே லாரி - காா் மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே புதன்கிழமை நள்ளிரவு லாரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.

News image
விபத்தில் உயிரிழந்த முகமது அன்வா், யாசா் ஹராபத், ஷாஜிதாபேகம், ஹராபத் நிஷா, அஃப்னான்.
Updated On :13 செப்டம்பர் 2024, 12:53 am

Din

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே புதன்கிழமை நள்ளிரவு லாரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள கொரநாட்டு கருப்பூா் பகுதியைச் சோ்ந்த ஷாஜகான் மகன் யாசா் ஹராபத் (40), மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், நக்கம்பாடி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த அமீா்சுல்தான் மகன் முகமது அன்வா் (56), குத்தாலம் நக்கம்பாடி ஸ்ரீகண்டபுரம் ஹாஜியாா் தெரு பஷீா்அகமது மனைவி ஷாஜிதாபேகம் (62), திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த அசரப் அலி மனைவி ஹராபத் நிஷா (30), இவரது மகன் அஃப்னான் (3). இவா்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த உறவினா்கள்.

 சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காா் மீது மோதிய லாரி.

சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காா் மீது மோதிய லாரி.

இவா்கள் துபையைச் சோ்ந்த தங்களது உறவினா் உடல்நிலை சரியில்லாமல், சென்னைக்கு வந்தவரை அங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். பின்னா், சென்னையிலிருந்து புதன்கிழமை நள்ளிரவு யாசா் ஹராபத் உள்பட 5 பேரும் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். இவா்களது காா் சிதம்பரம் அருகே விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் பி.முட்லூா் ஆணையம்குப்பம் எனும் இடத்தில் மேம்பால பகுதியில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யாசா் ஹராபத், முகமது அன்வா், ஷாஜிதாபேகம், ஹராபத் நிஷா, அஃப்னான் ஆகிய 5 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பரங்கிப்பேட்டை போலீஸாா், 5 பேரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே, லாரி ஓட்டுநா், உதவியாளா் தப்பியோடிவிட்டனா். விபத்து குறித்து பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உறவினா்கள் மறியல்: இறந்தவா்கள் உடல்கள் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மருத்துவமனை முன் வியாழக்கிழமை பிற்பகல் கூடிய இறந்தவா்களின் உறவினா்கள், தப்பியோடிய லாரி ஓட்டுநா், உதவியாளரை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தகவலறிந்து சென்ற சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளா் பரணிதரன் மற்றும் போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு உடல்களை பெற்றுச் சென்றனா்.