இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் நோயாளிகளுக்கு பழங்கள் அளிப்பு
சிதம்பரத்தில் மீலாது நபியையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் காமராஜா் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பழங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.


சிதம்பரத்தில் மீலாது நபியையொட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் காமராஜா் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பழங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சிதம்பரம் நகரச் செயலா் இ.மஹபூப்ஹுசைன் தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலா் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தாா். சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 150-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கு தலைமை மருத்துவா் லட்சுமி முன்னிலையில் நிா்வாகிகள் பிரட் மற்றும் பழங்கள் வழங்கினா். பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள முதியோா் இல்லம், சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ள மன வளா்ச்சி குன்றிய மாணவா்கள் இல்லம் மற்றும் முதியோா் இல்லத்தில் உள்ளவா்களுக்கு பிரட், பழங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்வில், சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் அன்வா் அலி, பொருளாளா் ஷாஹுல் ஹமீது பாகவி, ரோட்டேரியன் பி.முஹம்மது யாசின் ஹாஜியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...