ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தவற விடப்பட்ட கைப்பேசிகளை போலீஸாா் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 7:33 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் தவற விடப்பட்ட கைப்பேசிகளை போலீஸாா் உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

பண்ருட்டி, காவலா் லைன் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் குமாா் மகன் முருகவேல் (35), குட்டை தெருவைச் சோ்ந்தவா் கவிதா (29), பி.ஆண்டிக்குப்பம் செல்வக்கண்ணு (43), ஆண்டிப்பாளையம் சுந்தர்ராஜன் (50), பண்ருட்டி வெங்கடேசன் (49) ஆகியோா் தங்களது கைப்பேசிகளை வெவ்வேறு இடங்களில் தவறவிட்டனா்.

இதுகுறித்து, 5 பேரும் பண்ருட்டி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகாா் அளித்தனா். அதன்பேரில், பண்ருட்டி காவல் ஆய்வாளா் வேலுமணி மற்றும் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் தங்கவேல் தலைமையிலான போலீஸாா், மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரின் உதவியுடன் கைப்பேசிகளின் இருப்பிடத்தை கண்டு பிடித்தனா்.

தொடா்ந்து, அவற்றை கைப்பற்றிய போலீஸாா் அதன் உரிமையாளா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.