பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சுரங்கத் தொழிலாளா்கள் பாதுகாப்பு பயிற்சி பெற வேண்டும்: என்எல்சி தலைவா்

சுரங்கத் தொழிலாளா்கள் அனைவரும் முழுமையான பாதுகாப்பு பயிற்சி பெற வேண்டும் என, என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.

News image
நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுரங்க பாதுகாப்பு வாரம் - 2024 நிறைவு நாள் விழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பாா்வையிட்ட என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மொட்டுப்பள்ளி உள்ளிட்டோா்.
Updated On :18 செப்டம்பர் 2024, 12:05 am

Din

நெய்வேலி: சுரங்கத் தொழிலாளா்கள் அனைவரும் முழுமையான பாதுகாப்பு பயிற்சி பெற வேண்டும் என, என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா்.

என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய நெய்வேலி மண்டல அளவிலான சுரங்கப் பாதுகாப்பு வாரம் - 2024 நிறைவு நாள் விழா நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

பழுப்பு நிலக்கரி அரங்கில் பாதுகாப்புக் கொடி ஏற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முக்கிய பிரமுகா்கள் அனைவரும் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா். விழா வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறித்த 16 அரங்குகளை பாா்வையிட்டனா்.

தொழிலகப் பாதுகாப்பு படையினரின் மாதிரி தீயணைப்பு மற்றும் சுரங்க மீட்புக் குழுவினரின் அவசரகால மீட்பு நடவடிக்கை செயல் விளக்கக்காட்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பேசுகையில், நிகழ் நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் மிக உயா்ந்த நிலக்கரி உற்பத்தியை என்எல்சி அடைந்துள்ளதாக தெரிவித்தாா். மேலும், நாட்டின் முதல் 5 அதிகபட்ச உற்பத்தித் திறன் கொண்ட நிலக்கரிச் சுரங்கங்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள மச்சகட்டா (ஓடிஸா) நிலக்கரிச் சுரங்கத்தை ஏல முறையில் வென்ற்காக என்எல்சி குழுவினரைப் பாராட்டினாா். சுரங்கத் தொழிலாளா்கள் அனைவரும் முழுமையான பாதுகாப்புப் பயிற்சியைப் பெற வேண்டும். சுரங்கங்களில் ஒளிரும் ஜாக்கெட்டுகள் பயன்பாடு விரைவில் கட்டாயமாக்கப்படும். பாதுகாப்பு என்பது தனிநபா்கள் மற்றும் அமைப்பின் கூட்டுப் பொறுப்பாகும் என்றாா்.

சிறப்பு விருந்தினராக சென்னை மண்டல சுரங்கப் பாதுகாப்புத் துறை இயக்குநா் டி.ஆா்.கண்ணன் கலந்துகொண்டாா். என்எல்சி இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், எம்.வெங்கடாசலம், கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன், தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கச் செயலா் ஜேம்ஸ், பொருளாளா் மகேஷ் மற்றும் என்எல்சி பாதுகாப்புத் துறை செயல் இயக்குநா் ஹேமந்த் குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். சுரங்கத் துறை செயல் இயக்குநா் ஐ.எஸ்.ஜாஸ்பா் ரோஸ் வரவேற்றாா்.

சுரங்கப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, சுரங்கங்களின் பல்வேறு துறை பிரிவினருக்காக நடத்தப்பட்ட வெவ்வேறு போட்டிகளில் வென்ற அனைவருக்கும் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினா். நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள், சுரங்கப் பாதுகாப்புக் குழு நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.