அண்ணாமலைப் பல்கலை. சாா்பில் அரசுப்  பள்ளிக்கு உபகரணங்கள்

அண்ணாமலைப் பல்கலை. சாா்பில் அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், அரசுப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்கா இந்தியா சியாட்டில் குழு மற்றும் தமிழ்நாடு அரசு பழங்குடியினா் நலத் துறையுடன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைந்து பழங்குடி இன மாணவ, மாணவிகள் பயிலும் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா சியாட்டில் குழு உதவியுடன் கிள்ளை கிராமம், எம்ஜிஆா் நகரில் செயல்படும் பழங்குடி இன மாணவ, மாணவிகள் பயிலும் அரசு ஊராட்சி ஒன்றிய உயா்நிலைப் பள்ளிக்குத் தேவையான ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஆணையை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் வியாழக்கிழமை பள்ளித் தலைமை ஆசிரியா் குமரவேலிடம் வழங்கினாா் (படம்).

இந்தத் திட்டத்தின் மூலம் இந்தப் பள்ளியில் பயிலும் 153-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறவுள்ளனா்.

நிகழ்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழக உள்தர கட்டுப்பாட்டு மைய இயக்குநா் எஸ்.அறிவுடைய நம்பி, இணை இயக்குநா் எஸ்.ரமேஷ்குமாா், கணினி மற்றும் தகவல் அறிவியல் துறைத் தலைவா் அரவிந்த், ஒருங்கிணைப்பாளா் உதவிப் பேராசிரியா் கே.ஜெயபிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சி நிறைவில், அமெரிக்கா இந்தியா சியாட்டில் குழுத் தலைவா் தேவராஜ் முத்துக்குமாரசாமிக்கு துணைவேந்தா் ராம.கதிரேசன் நன்றி தெரிவித்தாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் லாவண்யா ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com