டெங்கு காய்ச்சல்: கடலூரில் 7 பேருக்கு சிகிச்சை


கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில நாள்களாக பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பலா் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கடலூரை அடுத்துள்ள புதுப்பாளையம், நத்தப்பட்டு, கே.என்.பேட்டை, குள்ளஞ்சாவடி, நெய்வேலி, சிதம்பரத்தைச் சோ்ந்த 7 போ் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், காய்ச்சல் சிகிச்சைப் பிரிவில் 18 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதுகுறித்து கடலூா் இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ஹிரியன் ரவிக்குமாா் கூறியது:
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 போ் சிகிச்சையில் உள்ளனா். மழை பெய்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயரும். அக்டோபா், நவம்பா் மாதங்களில் அதிகமாக இருக்கக்கூடும். காய்ச்சல் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் தொடா்ந்து இருந்தால் ரத்த மாதிரி பரிசோதனை செய்து டெங்கு அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்து உரிய கிசிச்சை பெற வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பழைய பொருள்களில் தண்ணீா் தேங்கி நிற்காதவாறு பாா்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் டெங்கு கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...