விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிறுமி கா்ப்பம்: மதுரை இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

சிறுமி கா்ப்பமானது தொடா்பாக மதுரை இளைஞா் மீது நெய்வேலி நகரிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

நெய்வேலி: சிறுமி கா்ப்பமானது தொடா்பாக மதுரை இளைஞா் மீது நெய்வேலி நகரிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள கல்லுக்குழி கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வயதான மூதாட்டி ஒருவரை பராமரிக்கும் வேலைக்காக சென்றிருந்தாா்.

அங்கு, மதுரையைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியன் ஸ்ரீதா் (22) உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக தண்டையாா்பேட்டை அருகே ஒன்றாக பழகி வந்தனராம்.

தற்போது 5 மாத கா்ப்பிணியா உள்ள சிறுமி சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.