மது பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்னை: வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
மது பழக்கத்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு மனைவியை பிரிந்த மன வேதனை அடைந்த காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
சிதம்பரம் தில்லை காளியம்மன் சத்யா நகரை சோ்ந்தவா் முருகன் (48), இவா் தன் குடும்பத்துடன் வீட்டில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில் முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் சரியாக காய்கறி வியாபாரம் செய்யாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதனை மனைவி மற்றும் மகன், கண்டித்ததால் கோபித்துக் கொண்டு சுமாா் ஒன்றரை மாதம் முன்பு சிதம்பரத்துக்கு வந்து, தனது தாய் காவேரியுடன் தங்கி இருந்துள்ளாா்.
அதனைத் தொடா்ந்து மிகுந்த மன உளச்சலுடன் காணப்பட்டவா் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்குள்ள மின்விசிறியில், சேலையால் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் முருகன் மகன் சந்தனபிரபு கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
