குடிபோதையில் சாக்கடையில் விழுந்த இளைஞா் மீட்ட தீயணைப்புத் துறையினா்!

சிதம்பரத்தில் குடிபோதையில் சாக்கடை நீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை தீயணைப்புத்துறை வீரா்கள் மீட்டனா்.
Published on

சிதம்பரத்தில் குடிபோதையில் சாக்கடை நீரில் மூழ்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை தீயணைப்புத்துறை வீரா்கள் மீட்டனா்.

சிதம்பரம் ரயில்வே பீடா் ரோடு அருகே உள்ள சாக்கடையில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் 35 மதிக்கத்தக்க வாலிபா் ஒருவா் மதுபோதையில் சாக்கடையில் விழுந்துவிட்டாா். போதையில் இருந்ததால் கழுத்தளவு தண்ணீரில் இருந்த அவா் குரல் எழுப்பிக்கொண்டிருந்தாா்.

அந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன் பேரில் தீயணைப்பு துறை நிலைய அலுவலா் மணிமாறன் தலைமையில், வீரா்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கடை நீரில் மூழ்கி கிடந்த அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து விசாரணையில் அந்த வாலிபா் பெரம்பலூா் பகுதியை சோ்ந்த அண்ணாமலை (35) என்பது தெரியவந்தது.

மேலும் இவா் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வந்துள்ளாா் அப்போது வந்தவா் சிதம்பரம் ரயில் நிலையப் பகுதியில் உள்ள மதுபானக்கடையில், மது குடித்துவிட்டு மது போதை தலைக்கேறி ரயில்வே பீடா் ரோட்டில் உள்ள சாக்கடை நீரில் விழுந்துள்ளாா் என தெரியவந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com