அண்ணாமலைநகா் பேரூராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிளை நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற பேரூராட்சி மன்றத் தலைவா் கே.பழனி மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.
அண்ணாமலைநகா் பேரூராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிளை நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற பேரூராட்சி மன்றத் தலைவா் கே.பழனி மற்றும் உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.

அண்ணாமலைநகா் பேரூராட்சியில் கிளை நூலகம் திறப்பு

சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகா் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிளை நூலகத்தை
Published on

சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகா் பேரூராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிளை நூலகத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரூராட்சி மன்றத் தலைவா் க.பழனி குத்துவிளக்கு ஏற்றினாா். பேரூராட்சி செயல் அலுவலா் பா.கோமதி, துணைத் தலைவா் வி.தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளை நூலகா் அம்சரா பானு வரவேற்றாா்.

நிகழ்ச்சியை சிதம்பரம் கிளை நூலகா் ர.அருள் தொகுத்து வழங்கினாா். பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் தங்க அன்பரசு, வேலு, வேலாயுதம், தேவிகா, சந்திரா, விஜயலட்சுமி, துப்புரவு அலுவலா் துரைராஜ், இளநிலை உதவியாளா் இளமதி, ஓய்வுபெற்ற மாவட்ட நூலகா்கள் ராஜேந்திரன், சந்திரபாபு, நூலகா்கள் இளையராஜா, கணேஷ், சுகந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com