சிறுபாக்கம் அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.
சிறுபாக்கம் அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.

மொபெட் மீது காா் மோதல்: 2 பெண்கள் காயம்

Published on

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே மொபெட் மீது காா் மோதியதில் 2 பெண்கள் காயமடைந்தனா்.

வேப்பூா் வட்டம், மா.புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சுரேஷ் மனைவி கவிதா (36), பாலகிருஷ்ணன் மனைவி மகேஸ்வரி (37). இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மங்களூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மொபெட்டுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனா்.

அப்போது, எதிா் திசையில் வேகமாக வந்த காா், மொபட் மீது மோதிவிட்டு சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், கவிதா, மகேஸ்வரி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். காா் ஓட்டுநா் மற்றும் அதில் வந்த இருவா் லேசான காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் காயமடைந்தவா்களை மீட்டு, வேப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, கவிதா, மகேஸ்வரி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து சிறுபாக்கம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com