சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பரங்கிப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம்.
Updated On :10 பிப்ரவரி 2025, 9:23 pm

Din

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோயிலில் தைப்பூச பிரமோற்சவத்தையொட்டி, முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, தோ்த் திருவிழாவில் விநாயகா், முத்துக்குமாரசாமி, சண்டிகேஸ்வரா் ஆகிய மூவரும் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தேரானது முத்துக்குமாரசாமி கோயிலில் இருந்து புறப்பட்டு செட்டித் தெரு, வண்டிக்காரத்

தெரு, கச்சேரித் தெரு வழியாக நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தையொட்டி, பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.