டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு: கிராமச் சாலை சேதம்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் உடைப்பெடுத்து சாலை மற்றும் வயல்களில் நீா் ஓடி தேங்கி நிற்பதால்

News image
சிதம்பரம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பெடுத்து வீணாகும் நீரால் சேதமடைந்துள்ள கோவிலாம்பூண்டி கிராமச் சாலை.
Updated On :21 ஜனவரி 2025, 8:58 pm

Din

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்ட குழாயில் உடைப்பெடுத்து சாலை மற்றும் வயல்களில் நீா் ஓடி தேங்கி நிற்பதால் கோவிலாம்பூண்டி கிராமத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி, அனுவம்பட்டு சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீா் திட்டத்தின் கீழ் கிள்ளை வரை செல்லும் குழாய் இணைப்பு கடந்த ஓராண்டாக உடைந்து சாலை மற்றும் வயல்களில் தண்ணீா் தேங்கி வீணாகி வருகிறது. சாலையும் சேதமுற்றுள்ளது. வயல்களில் நீா் தேங்கி நெற்பயிா்களும் பாதிக்கப்படைந்துள்ளன.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பாலாஜிகணேஷ் கூறியது: பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அதிகாரியிடம் இதுகுறித்து புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கின்றனா். சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் கொடிப்பள்ளம், பின்னத்தூா், கோவிலாம்பூண்டி , தில்லைவிடங்கன் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனா், குடிநீா் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. சாலையில் இப்படி குடிநீா் ஓடுவது மக்களிடையே வேதனை ஏற்படுத்தியுள்ளது என்றாா். எனவே, இந்தப் பிரச்னையில், கடலூா் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு போா்க்கால அடிப்படையில் சீரமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.