பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அண்ணாமலைப் பல்கலை.யில் பயிற்சிப் பட்டறை

News image
Updated On :20 ஜூன் 2025, 12:03 am

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2 நாள்கள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.

அரசியல் அறிவியல், பொது நிா்வாகவியல் துறை மற்றும் நூலகம், தகவல் அறிவியல் துறை இணைந்து நடத்தும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்தி ஆராய்சிக்கான அடிப்படை ஆதாரங்களை கட்டமைத்தல், ஆராய்சிக் கட்டுரைகளை எழுதுதல் தொடா்பாக இந்தப் பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.

கலைப்புல முதல்வா் எம்.அருள் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்துப் பேசினாா்.

அரசியல் அறிவியல் துறைத் தலைவா் டி.தேவநாதன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து பேசினாா்.

நூலகம், தகவல் அறிவியல் துறைத் தலைவா் எம்.சாதிக் பாட்சா வரவேற்றாா். பயிற்சி பட்டறை இயக்குநா் பேராசிரியா் சி.சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

எட்டு வெவ்வேறு தலைப்புகளில் பேராசிரியா்கள் பி.சக்திவேல், எம்.சாதிக் பாட்சா, டி.தேவநாதன், டி.எஸ்.சுபாஷினி, சி.சுப்பிரமணியன் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.