கடலூர்
டிராக்டரில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
திருப்பாதிரிப்புலியூா் அருகே டிராக்டா் டிரைலா் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூா் அருகே டிராக்டா் டிரைலா் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் நவநீதநகரைச் சோ்ந்தவா் கோ.சரவணன் (40), டிராக்டா் ஓட்டுநா். இவரிடம் திருப்பாதிரிப்புலியூரைச் சோ்ந்த சு.வேல்முருகன் (56) உதவியாளராக வேலை பாா்த்து வந்தாா்.
இவா்கள் இருவரும் புதன்கிழமை காலையில் டிராக்டரில் தண்ணீா் விநியோகிக்க கம்மியம்பேட்டை பகுதிக்கு சென்றனா். அப்போது, ஓடும் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த வேல்முருகன், டிரைலா் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
