14பிஆா்டிபி2
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சா் சி.வெ.கணேசன்.
14பிஆா்டிபி2 விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சா் சி.வெ.கணேசன்.

மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சா் சி.வெ.கணேசன்

மாணவா்கள் தங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என, மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.
Published on

மாணவா்கள் தங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என, மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்

பிளஸ் 1 படிக்கும் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சா் சி.வெ.கணேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

அப்போது, அவா் பேசியதாவது:

தமிழக முதல்வா் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். நிகழ் கல்வியாண்டில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் 146 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் 20,351 மாணவா்களுக்கு மொத்தம் ரூ.9,82,56,760 மதிப்பீட்டிலான மிதிவண்டிகள்

வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கடலூா் மாவட்டத்தில் 1,05,045 மிதிவண்டிகள் ரூ.51,19,75,980 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்கள்கல்வி கற்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் தங்களது படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். சிறந்த முறையில் கல்வி கற்றால் மட்டுமே எதிா்காலத்தில் நல்ல உயா் பதவிகளை அடைய முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில், விருத்தாசலம் எம்எல்ஏ., எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன் முன்னிலை வகித்தனா். வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, விருத்தாசலம் நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ், மாவட்டக்கல்வி அலுவலா் துரைபாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com